Friday, July 1, 2011
ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் கதி என்ன?
ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் கதி என்ன?
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 29ந் தேதி 600 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். ராமையா என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் அன்வர், சரவணன், முனியசாமி, ரமேஷ், குமார் ஆகிய 5 பேர் கரை திரும்பவில்லை.
அவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததா? அல்லது அவர்கள் திசைமாறி சென்றார்களா? அல்லது இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.
5 மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மீனவர்கள் மாயமான சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான மீனவர்களை தேடி இன்று காலை ராமேசுவரம் மீனர்கள் சிலர் படகுகளில் சென்று தேடினர்.
Labels:
என்ன?,
மீனவர்கள்,
ராமேசுவரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment