தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளிகளின் பகற்கொள்ளைக்கு முடிவு கட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று சென்னையில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவிந்தராஜன், ரவிராஜபாண்டியன் கமிட்டி என்று பெற்றோர்களை ஏமாற்றுவதை நிறுத்து. ஸ்மார்ட் கிளாஸ், நோட்டு புத்தகங்கள் சீருடை என தனியார் பள்ளிகள் வியாபாரம் செய்து கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்க்காதே.
கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தும் பெற்றோர்களின் குழந்தைகளை வகுப்புக்கு வெளியே நிறுத்துவது முழங்கால் போடவைப்பது போன்ற சித்திரவதைகளை செய்யும், தனியார் பள்ளி முதலாளிகளை கைது செய்து உள்ளே தள்ளு என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment