Saturday, July 2, 2011
வீரபாண்டி ஆறுமுகம் மீது அவதூறு வழக்கு தொடருவேன்: அ.தி.மு.க. வக்கீல்
வீரபாண்டி ஆறுமுகம் மீது அவதூறு வழக்கு
தொடருவேன்: அ.தி.மு.க. வக்கீல்
சேலம் அருகே உள்ள நிலவராப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். அ.தி.மு.க. வக்கீல். இவர், தவறாக பேசி வருவதாக சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், மணிகண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் வக்கீல் மணிகண்டன், ‘’6 பேர் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க ஆரம்பத்தில் இருந்தே நான் தெரிவித்து வருகிறேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது. நான் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வெளியில் செல்லும்போது பின்னால் வந்து மிரட்டி சென்றனர்.
செல்போனிலும், போனிலும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதை எல்லாம் பொறுத்து கொண்டு இருந்து வந்தேன்.
அமைச்சராக இருந்தபோது வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய சிறைக்கு மாநகராட்சி காரில் சென்று பாரப்பட்டி சுரேஷ்குமாரை பார்த்து வந்தார்.
இதை நான்தான் வெளி உலகிற்கு கொண்டு வந்தேன். இதனால் அவர்கள் கோபம் அடைந்தனர். தேர்தல் நேரத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி தரும்போது அ.தி.மு.க. பொது செயலாளரை சரமாரி திட்டினார். ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதற்கு நான் விளக்கம் கேட்டேன்.
இது தவிர தேர்தல் நேரத்தில் சேலம் அங்கம்மாள் காலனி பகுதி மக்கள் பிரச்சினை பற்றி சி.டி. தயார் செய்து அதை வெளியிட்டேன். இதனால் அமைச்சர் கோபம் அடைந்தார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
இதன் பின்னர் நான் 6 பேர் கொலை குறித்து விசாரிக்க தமிழக டி.ஜி.பியை சந்தித்து மனு கொடுத்தேன். இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
எனக்கு மிரட்டல் விடுத்தபோது அந்த பேச்சை பதிவு செய்துள்ளேன். இதையும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அ.தி.மு.க. பொது செயலாளரை திட்டியதற்கான ஆதாரத்தையும் வைத்து கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Labels:
அ.தி.மு.க.,
அவதூறு,
ஆறுமுகம்,
தொடருவேன்:,
வக்கீல்,
வழக்கு,
வீரபாண்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment