Friday, July 1, 2011

மினி பஸ் மோதி பணியில் இருந்த டிராபிக் போலீஸ் பலி



மினி பஸ் மோதி பணியில் இருந்த டிராபிக் போலீஸ் பலி

திருச்செங்கோட்டில் மினி பஸ் மோதி பணியில் இருந்த டிராபிக் போலீசார் பலியானார்.


திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து பரிவில் ஏட்டாக பணிபுரிந்துவருபவர் செல்வராஜ்(42). இவர் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் பிரிவில் சிக்னலை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த திருச்செங்கோடு கூட்டப்பள்ளி செல்லும் மினி பஸ் ஒன்று பிரேக் பிடிக்காமல் டிராபிக் போலீஸ் மீது மோதியது. இவ்விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment