Saturday, July 2, 2011

நாளை நடிகர் கார்த்தி திருமணம் : இந்திரலோக மாடலில் அரங்கம்


நாளை நடிகர் கார்த்தி திருமணம் :
இந்திரலோக மாடலில் அரங்கம்
 
நடிகர் கார்த்தி திருமணம் கோவையில் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. திருமணத்தில் கலந்து கொள்ள நடிகர்- நடிகைகள், உறவினர்கள் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


  நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி-ரஞ்சனி திருமணம் கோவை கொடிசியா ஹாலில் நாளை அதிகாலை 5-45 மணிக்கு நடைபெறுகிறது.
 
திருமணம் நடைபெறும் கொடிசியா அரங்கம் இந்திரலோக மாடலில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.   நடிகர் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் கோவைக்கு வந்து விட்டனர்.

சிவகுமாரின் சொந்த வீடு கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள காசிகவுண்டன்புதூரில் உள்ளது. சிவகுமார் உள்பட அனைவரும் நேற்று மதியம் 12 மணி அளவில் காசிகவுண்டன்புதூர் வந்தனர்.
 
அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கியது. முதலில் வீட்டில் சாமி கும்பிட்டனர். பின்னர் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
 
இதில் சிவகுமாரின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.   விநாயகரை தரிசித்ததும் கார்த்தி உள்பட அனைவரும் திருமணம் நடைபெறும் கொடிசியா அரங்கத்துக்கு கிளம்பி வந்தனர்.
 
திருமணத்தில் உறவினர்கள், நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
 

 

No comments:

Post a Comment