Sunday, July 3, 2011
ஆசைக்கு இணங்க மறுப்பு: மனைவியை கொலை செய்த கணவன் கைது
ஆசைக்கு இணங்க மறுப்பு: மனைவியை கொலை செய்த கணவன் கைது
சென்னை அண்ணாநகர் கிழக்கு, எல் பிளாக் 28 வது தெருவைச் சேர்ந்தவர் சக்தி (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மலர் (37). மலர் அங்குள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வீடுகளுக்கு மலர் வேலைக்கு செல்லவில்லை.
எனவே வீட்டு வேலைக்காக மலரைத் தேடி ஒருவர் மலரின் வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார். வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் அவர் சென்றார். அங்கு மலர் சுவரில் சாய்ந்திருந்த நிலையில் இறந்திருந்தார். அவரது முன்பு ஒரு தட்டில் சாப்பாடும், அதனருகில் எலி மருந்தும் இருந்தது.
எனவே அந்த நபர் அண்ணாநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கணவனிடம் விசாரணை நடத்திய போது, மனைவி எப்படி இறந்தார் என்பது தெரியாது என்று பதிலளித்தார். எனவே மலரின் மரணத்தை சந்தேகத்துக்கு இடமான சாவு என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு மலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. மலரின் தோழிகள் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரின் கொடுமைகள் பற்றி அவர்களிடம் மலர் சொல்லியிருந்தது தெரிய வந்தது. எனவே கணவன் சக்தியை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து சக்தியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:
சம்பவத்தன்று காலையில் உறவுக்கு மலரை சக்தி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மலர் மறுத்தார். இதனால் அவரை சக்தி அடித்து உதைத்துள்ளார். அடி தாங்காமல் மலர் மயங்கிச் சாய்ந்துவிட்டார். உடனே மலரின் மூக்கில் விரலை வைத்து பார்த்துள்ளார். மூச்சு நின்றுவிட்டது.
பின்னர் மலரை சுவரில் சாய்த்து வைத்து எலி மருந்தை மலரின் வாய்க்குள் சக்தி ஊற்றியிருக்கிறார். என்றாலும், சந்தேகம் தீராமல் கழுத்தை சக்தி நெரித்து இருக்கிறார். பின்னர் கதவை திறந்துபோட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment