Sunday, July 3, 2011

தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவன் பலி




தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவன் பலி


மேட்டூர் மாதையன் குட்டையில் இருக்கும் எம்.ஏ.எம் மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.


மேட்டூர் நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலேருக்கும் பள்ளியிலேருந்து மாணவர்களை தினமும் பள்ளியின் பேருந்துகள் கொண்டு வந்து மேட்டூரில் கொண்டுவந்து விட்டுவிட்டு செல்லும்.


நேற்று மலை, சம்பள்ளி இந்திரா நகரில் இருக்கும் தினகர் என்பவரின் மனைவி ஜமுனா அவர்களது ஆறு வயது மகன் தயாநிதிக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது ஸ்கூட்டி வண்டியின் பின்னல் உட்காறவைத்துக் கொண்டு குஞ்சாண்டியுரில் உள்ள மருத்துவரை பார்க்க சென்றுள்ளார்.


அப்போது, பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டுகொண்டு குஞ்சண்டியூரை நோக்கி வந்த எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியின் பேருந்து, ஜமுனா சென்று கொண்டிருந்த மொபட்டை ஒட்டி சென்றுள்ளது. பேருந்துக்கு வழிவிட்டு இடது பக்க தார் சாலையை விட்டு கீழே இரங்கி நின்றுள்ளார் ஜமுனா.


வழக்கமான உயரத்தில் இருக்கும் பேருந்தின், படிக்கட்டுகளில் மாணவர்கள் இறங்கி, ஏற கொஞ்சம் சிரமமாக இருக்கும், மாணவர்கள் சிரமம் இல்லாமல் ஏறி, இறங்க வசதியாக படிக்கட்டுக்கு கீழே கொஞ்சம் வெளியே நீட்டியபடி கூடுதலாக ஒரு இரும்பு படிக்கட்டு தயார் செய்து அதை வழக்கமான படிக்கட்டுக்கு கீழே போருத்தியுள்ளர்கள் எம்.ஏ.எம் பள்ளி நிவாகத்தினர்.


குஞ்சாண்டியூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஜமுனாவின் ஸ்கூட்டி வண்டிக்கு பக்கத்தில் சென்ற பேருந்தின் படியின் கீழே, அரையடி நீளம் வெளியே நீட்டிய நிலையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு படிகாட்டு, நின்று கொண்டிருந்த ஜமுனாவின் ஸ்கூட்டி வண்டியில் மாட்டி வண்டியை கீழே இழுத்து தள்ளியது.


நிலை தடுமாறி சாய்ந்த ஜமுனா வலது பக்கம் விழுந்து விட்டார், ஆனால், குழந்தை தயாநிதி இடது பக்கம் பேருந்து சக்கரத்துக்குள் விழுந்து விட்டான், நினைத்துப்பார்க்கவே முடியாத இந்த கொடுரமான இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தயாநிதி இறந்துவிட்டான். பலமானம்க்காயயங்களுடன் ஜமுனா மருத்துவமனியில் உள்ளார்.


தயாநிதியின் மரணத்திற்கு யார் காரணம்...?
சட்டத்தை மதிக்காத, பொதுமக்கள் நலனில் அக்கறையில்லாத  பள்ளி நிர்வாகியா..?
பக்குவமில்லாத, பொறுப்பில்லாத பேருந்து ஓட்டுனரா...?
பஸ்சின் பாடிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் வகையில் பொருத்தப்பட்ட படியுடன் இருக்கும் பேருந்தை சாலையில் ஓடுவதற்கு அனுமதி வழங்கிய மோட்டார் வாகன ஆய்வாளரா...?

No comments:

Post a Comment