Friday, July 1, 2011
விரைவில் வீரத்தைக் காட்டுவோம்: துரைமுருகன்
விரைவில் வீரத்தைக் காட்டுவோம்: துரைமுருகன்
திமுக துணை பொதுச்செயலர் துரைமுருகன் அரக்கோணத்தில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 88-வது பிறந்த நாள் விழா பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அவர், ‘’இலங்கை தமிழர் பிரச்னைக்காக தனது ஆட்சியையே தூக்கி எறிந்தவர் அவர். பிரபாகரனை தூக்கில் போட வேண்டும், போர் என்றால் அங்கு மக்கள் சாகத்தான் வேண்டும் என்றெல்லாம் சொன்னவர் ஜெயலலிதா. இன்று இதையெல்லாம் மறந்து விட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறார்.
சூரியன் அஸ்தமித்து விட்டதாக ஜெயலலிதா கூறினார். சூரியனுக்கு அஸ்தமனம் என்பதே கிடையாது. பூமியின் சுழற்சியில் அது பார்வையில் இருந்து மறைகிறது அவ்வளவுதான். அது மறுபடியும் உதயமாகும்.
சட்டப் பேரவையில் விரைவில் எங்கள் வீரத்தை காட்டுவோம்’’ என்று பேசினார்.
Labels:
காட்டுவோம்:,
துரைமுருகன்,
விரைவில்,
வீரத்தைக்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment