Friday, July 1, 2011

நடிகர் கார்த்தி திருமணம்: கோவையில் குவிகிறார்கள் நட்சத்திரங்கள்



நடிகர் கார்த்தி திருமணம்: கோவையில் குவிகிறார்கள் நட்சத்திரங்கள்
 
நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி- ரஞ்சனிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் நாளை மறுநாள் (3-ந் தேதி) காலை 5.45 மணிக்கு கோவை கொடிசியா ஹாலில் நடைபெறுகிறது.
 
திருமணத்துக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது. திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நடிகர் சிவகுமார் நேற்று காலையே கோவை சென்றுவிட்டார். உறவினர்களுடன் திருமண ஏற்பாடுகளை முன் நின்று செய்து வருகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு நடிகர் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் சென்றனர்.
 
அவர்கள் அனைவரும் கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் தங்கியுள்ளனர். கோவைக்கு நேற்று இரவு சூர்யா வந்ததுமே திருமண வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனது தம்பியின் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
 
இன்று காலை முதல் உறவினர்களை சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.
 
கார்த்தியின் திருமணத்தில் நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்குவதற்கு வசதியாக ஓட்டல் லீ மெரிடியன், ரெசிடென்சி, ஜென்னி கிளப் மற்றும் முக்கிய ஓட்டல்களில் 600 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
திருமணத்தில் பங்கேற்க நடிகை நக்மாவும் கோவை வந்துள்ளார். கார்த்தி திருமணம் நடைபெறும் கொடிசியா ஹால் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ள திரைச்சீலைகள், ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் வண்ண விளக்குகள் ஆகியவை பிரமிப்பூட்டுகின்றன.
 
இது கொடிசியா ஹால்தானா என்று வியக்கும் வகையில் அரங்கை அப்படியே மாற்றி அமைத்திருக்கின்றனர். இதே போல் சிவகுமாரின் சொந்த ஊரான காசிக் கவுண்டன் புதூரில் உள்ள வீடும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. வீட்டு முன்பு பந்தல் போடும் பணி நிறைவு பெற்று திருமண களை குடி கொண்டுள்ளது.

No comments:

Post a Comment