Sunday, July 3, 2011

காதல் திருமணத்தால் மோதல்: சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 7 பேர் கைது



காதல் திருமணத்தால் மோதல்: சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 7 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கருப்பையா. இவர் தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வருபவர் ஏட்டு சுப்பிரமணி. கருப்பையாவின் மகனும், சுப்பிரமணியின் மகளும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி இருவரும் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் கருப்பையா உள்பட அவரது தரப்பினர் 5 பேரையும், சுப்பிரமணி உள்பட அவரது தரப்பில் 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment