Sunday, July 3, 2011

தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை



தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை

மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அவர் பதவியில் இருந்து விலகினார். இப்போது தில்லி திகார் சிறையில் உள்ளார்.


இதே 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீது இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


பதவியில் இருந்து கொண்டு விளக்கம் அளிப்பது பொருத்தமாக இருக்காது. உடனடியாக அவர் பதவி விலகி வழக்கைச் சந்திக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment