Saturday, July 2, 2011
ஜெயலலிதாவிற்கு திமுக இளைஞர் அணி கண்டனம்
ஜெயலலிதாவிற்கு திமுக இளைஞர் அணி கண்டனம்
தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்ட, சமச்சீர் கல்வியை அமல்படுத்தத் தவறிய ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., இளைஞர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தி.மு.க., இளைஞர் அணி, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம், சென்னையில் நடந்தது. இளைஞர் அணிச் செயலர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்ட, நலத்திட்டங்களில் ஒன்றான சமச்சீர் கல்வியை அமல்படுத்தத் தவறிய, ஜெயலலிதாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வியை தடை செய்வதன் மூலம், மாணவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதையும், 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் வீணடிக்கப்படுவதை சுட்டிக்காட்டவும், கட்சியில் உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானங்களை விளக்கவும்,
தமிழகம் முழுவதும் வட்டங்கள்தோறும், தெரு முனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது, புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல், போலியான காரணங்களைக் கூறி, சட்டசபை செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றிய, அ.தி.மு.க., அரசை கண்டிப்பது, என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Labels:
இளைஞர்,
கண்டனம்,
திமுக,
ஜெயலலிதாவிற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment