Saturday, July 2, 2011
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை
நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன்கள் சிங்காரவேலு (வயது 30), ஞானவேல் (28), மகள் மங்கையர்க்கரசி (16). கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது நாராணயசாமி தனது மனைவியுடன் இறந்தார். இதற்காக அரசு சார்பில் சுனாமி நிதியாக ரூ. 5 லட்சம் மங்கையர்க்கரசி பெயரில் வழங்கப்பட்டது.
இந்த நிதியை ஞானவேல் பெற்றுக்கொண்டார். 2006 ம் ஆண்டு முதல் மங்கையர்க்கரசியை ஞானவேல் வளர்த்து பள்ளியில் படிக்க வைத்தார். இந்த ஆண்டு மங்கையர்க்கரசி 10 ம் வகுப்பு முடித்து உள்ளார். அவர் அண்ணன் ஞானவேலிடம் நான் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஞானவேல் மேற்கொண்டு படிக்க வேண்டாம். உன்னை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு உள்ளேன் என்றார். ஆனால் இதற்கு மங்கையர்க்கரசி சம்மதிக்காமல் தனது மூத்த அண்ணன் சிங்கார வேலுவிடம் தெரிவித்தார். இவர் நேராக ஞானவேல் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் மங்கையர்க்கரசியை படிக்க வை. இல்லை என்றால் சுனாமி நிதி பணத்தை என்னிடம் தந்து விடு.
நான் அவளை படிக்க வைத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஆத்திரம் அடைந்த ஞானவேல் கத்தியை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிங்காரவேலுவை அக்கம் பக்கத்தினர் தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். ஆத்திரத்தில் அண்ணனை கொன்றுவிட்டோமே என வேதனை அடைந்த ஞானவேல் நாகை அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார். அங்கு கொலை செய்யப்பட்ட சிங்காரவேலுவின் மனைவி வழி உறவினர்கள் குமார், ரவிச்சந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் வந்தனர். 3 பேரும் ஞானவேலை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் ஞானவேல் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நாகை போலீசார் வழக்குபதிவு செய்து குமார், ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். ஓரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அவர்களது உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment