Friday, July 1, 2011
வேன், பஸ் மீது ரயில் மோதல்: 4 பேர் பலி
வேன், பஸ் மீது ரயில் மோதல்: 4 பேர் பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வெள்ளிக்கிழமை வேன், பஸ் மீது சரக்கு ரயில்மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர்.
சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் ஊஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செட்டிமுத்து மகன் பூபதி (30). தறித் தொழில் செய்து வந்த இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிதாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நண்பகலில் வைகுந்தம் அக்ரஹாரம் தாழையூரைச்சேர்ந்த எம்.மாது (40), சரவணன் (32), பி.மணி (40), எம்.ரவி (30), என்.நாகராஜ்(28), பி.பூபதி (20) ஆகியோரை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றார்.
வைகுந்தத்தை அடுத்த மேட்டுக்காடு பகுதியில் சென்றபோது ஈரோடு-சேலம் ரயில்பாதையில் ரயில் வருவதற்காக நண்பகல் 12.15 மணியளவில் கேட் போடப்பட்டிருந்தது.
கேட் கீப்பர் சுரேஷ் (34) இரும்புக் கதவைப் போட்டுவிட்டு ரயிலுக்காககாத்திருந்தார். அந்த வழியாகச் சென்ற பூபதியின் கார், ரயில் செல்வதற்காக கதவையொட்டி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் வைகுந்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் மினி பஸ் ஒன்று ரயில்வே
கேட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்ஸில் சங்ககிரி ஆவரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.பழனிவேலு (45), கொங்கணாபுரம் கோரணம்பட்டியைச்சேர்ந்த ஆர்.செல்வம் (40), கொங்கணாபுரம் ரங்கம்பாளையம் பிரிவைச் சேர்ந்த
என்.நாகராஜ் (40), மாவேலிபாளையத்தைச் சேர்ந்த கே.நடேசன் (60) ஆகியோர் இருந்தனர். பள்ளி பஸ் டிரைவர்களான இவர்கள், இந்த வழியாக ஓட்டுநர் பயிற்சிமேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ரயில்வே கேட் பகுதியில் வேகமாக வந்த பள்ளி பஸ், எதிர்பாராதவிதமாக முன்னால்நின்று கொண்டிருந்த வேனின் பின் பகுதியில் மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறியவேன், கேட்டை உடைத்துக் கொண்டு தண்டவாளத்தில் நுழைந்தது. அப்போது ஈரோட்டில்இருந்து குஜராத் மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனங்களை எடுத்துச்செல்லும் சரக்கு ரயில், வேன் மீதும் அதைத் தொடர்ந்து வந்த பள்ளி பஸ் மீதும்பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ் சுக்குநூறாக நொறுங்கியது. ஆம்னி வேனும் தூக்கி வீசப்பட்டது. இதில் பள்ளி பஸ்ஸை ஓட்டி வந்த பழனிவேலு, செல்வம், ரங்கம்பாளையம் என்.நாகராஜ்,வேனை ஓட்டி வந்த பூபதி ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர்.
ரயில் டிரைவர்கள் கேரளாவைச் சேர்ந்த அரவிந்த் (57), பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இருவாகனங்களிலும் பயணித்த 9 பேர் காயம் அடைந்தனர். இவர் சங்ககிரி அரசுமருத்துவமனையிலும் ஈரோடு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மீட்பு ரயில் விரைந்து வந்தது.காயம்பட்டவர்களுக்கு அதன் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம், ரயில்வே கோட்ட மேலாளர் பி.என்.ராம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், சங்ககிரி கோட்டாட்சியர் பழனிசாமி,ரயில்வே டி.எஸ்.பி. ராஜவேல் உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைபார்வையிட்டு துரிதப்படுத்தினர் . இந்த விபத்து வைகுந்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment