Wednesday, June 29, 2011

போலி பெண் போலீசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மதுரை போலீசார்




போலி பெண் போலீசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மதுரை போலீசார்

மதுரை செல்லூரைச் சேர்ந்த ராணி என்பவர், தனது தோழி பெண் போலீசாரின் உடையை அணிந்துகொண்டு, மதுரை களிமேடு பகுதியில் உலாவந்துள்ளார்.

அப்போது களிமேடு போலீசார் சந்தேகப்பட்டு ராணியை விசாரித்துள்ளனர். போலீசார் விசாரித்ததில், ராணி போலி பெண் போலீஸ் என தெரிய வந்தது.


இதையடுத்து ராணியை மதுரை ஜெஎம்4 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். போலீஸ் உடையை அணிந்த குற்றத்திற்காக அவரை 15 நாள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


ராணியை ஏற்கனவே சிவக்குமார் என்ற போலீஸ்காரர் காதல் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment