Tuesday, June 28, 2011

சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்தில் தீ



இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

மயிலாடுதுறை அருகே வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் கடந்த 5 2 2007 அன்று மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலையத்தில் சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் ஏற முயன்றார்.


அப்போது பஸ் புறப்பட்டதால் செல்வம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் செல்வத்திற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மயிலாடுதுறை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடந்து, அதில் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு இழப்பீட்டுத்தொகை கேட்டார்.


வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டியன், கடந்த 20 08 2009 அன்று செல்வத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக வட்டியுடன் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 777 வழங்க சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட செல்வத்திற்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.


இதையடுத்து நீதிபதி செந்தூர்பாண்டியன், சென்னை அரசுவிரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு அலுவலரின் உதவியுடன் 27.06.2011 அன்று மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் மேற்கண்ட பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஓப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment