Wednesday, June 29, 2011

செல்போன் வியாபாரிகள் நாளை கடை அடைப்பு


 செல்போன் வியாபாரிகள் நாளை கடை அடைப்பு
 
ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் உள்பட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சொந்தமாக விற்பனை நிலையங்கள் வைத்துள்ளன. என்றாலும் இந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு தனியார்களையே நம்பி உள்ளன. 
 
ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு தனியார் செல்போன் கடைக்காரர்கள் கணிசமான தொகையை கமிசனாக பெற்று வருகிறார்கள். இந்த கமிசன் தொகையை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைத்துள்ளன. 
 
இதனால் செல்போன் கடைக்காரர்களுக்கு லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது செல்போன் கடைகாரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (வியாழன்) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த செல்போன் கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
 
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
’’செல்போன் உபயோகிப்பாளர்களின் பணத்தை சிறப்பு சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து கோடி, கோடியாக லாபம் அடைவதை ஏற்க முடியாது. புதிய இணைப்பு விற்பனையாளர்களின் லாபம் குறைக்கப்பட்டதை கண்டிக்கிறோம்.
 
இதை வலியுறுத்தி 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்போன் கடைகள் அடைக்கப்படும். ரீசார்ஜ், புதிய இணைப்பு விற்பனை எதுவும் நாளை பகலில் நடைபெறாது’’ என்று அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment