Tuesday, June 28, 2011

சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை



சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


முந்தைய அதிமுக ஆட்சியில் செ.மா. வேலுச்சாமி அமைச்சராக இருந்தார். அதற்குப்பின் திமுக தலைமையிலான ஆட்சி வந்தது. கடந்த 2009ல், ‌வேலுச்சாமியின் கோவை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக, ரூ. 52.54 லட்சம் அதிகமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றவியல் நீ‌திமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பானுமதி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரமோ, சாட்சியோ இல்லை என்றும், இதனால் இவர்கள‌ை விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

No comments:

Post a Comment