Thursday, June 30, 2011
கூடலூரில் மூலிகை பண்ணை
கூடலூரில் மூலிகை பண்ணை
சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா மையமாக இல்லாத கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியை உள்ளடக்கிய தேவாலா அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை துறையின் சார்பில் மூலிகை பண்ணை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.
வெப்பம், மிதவெப்பம், குளிர் என தமிழ் நாட்டிலேயே மூன்று பருவ காலத்திலும் மக்கள் வந்து செல்லும் சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்தில் ஏலக்காய், இலவங்கம், பட்டை, குருமிளகு, ஜாதிக்காய் போன்ற வாசனை திரவியங்கள் அதிகம் விளைகிறது.
அத்தோடு மித வெப்ப பகுதியான தேவாலாவில் சீரகம், கடுகு, வெந்தயம், மல்லி, இஞ்சி, கடுகு, பூண்டு, திப்பிலி, ஜாதி பந்திரி, வெண்ணிலா, அதோவன், அன்னாசி பூ, வசம்பு போன்ற மூலிகை வகைகள் விளைகிறது.
இப்பண்ணை அமைப்பதின் மூலம், நீலகிரி மாவட்டத்தில் விளையும் வாசனை திரவியங்களையும், மூலிகைகளையும் ஒருசேர ஒரே இடத்தில் பயிர் செய்து மூலிகை பண்ணை அமைப்பதின் மூலம் நீலகிரி மாவட்டம் தேயிலை மட்டும் விளையும் மாவட்டம் என்ற பெயரை உடைக்கவும், பொது மக்களுக்கு தேவையான எல்லா வகை மூலிகைகளையும் உற்பத்தி செய்து கொடுப்பதன் மூலம், விவசாய மக்களுக்கு நல்ல முறையில் பொருளாதார வருவாயையும் ஏற்படுத்த முடியும்.
அத்தோடு சுற்றுலா பயணிகளால் ஒதுக்கப்பட்ட்ட பகுதியாக உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கமுடியும் என்று தோட்டக்கலை துறையின் இயக்குனர் முனைவர் ராம்.சுந்தர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment