Thursday, June 30, 2011

குழந்தை திருமணம் செய்து வைத்த 20பேர் கைது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் பழைய பழக்க வழக்கங்கள் மாறாத பல கிராமங்கள் உள்ளது.

எருமப்பட்டி அருகில் உள்ள ஜம்புமடை என்ற கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் சமூகத்தில் பெண்குழந்தைகள் திருமண வயதை தாண்டும் முன்னரே திருமணம் செய்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் ஒரு இளவயது திருமணம் நடப்பதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தை தொடர்ந்து, அதிகாரிகள் இளவயது திருமணங்கள் செய்விக்க கூடாது என்று கிராம மக்களுக்கு அறிவுருத்தியும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும், கேளாமல் திருமணம் செய்துவைத்ததாக சொல்லி ஊர் போது மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல் வட்டாச்சியர் திருஞானம், எருமப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜம்புமடை கிராமத்தை சேர்ந்த பைராநாயுடு, தளமாநாயுடு, அங்கம்மாள், வீரம்மாள்,வீராச்சாமி, வரதம்மாள், ராசுநாயுடு உட்பட இருபது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிருத்தப்பட்டார்கள்.

தாங்களுக்கு பிணை வழங்கக்கோரிய கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களை சொந்த பிணையில் விடுவித்த நடுவர் ஜோதி, கிராமங்களை கண்காணித்து இளவயது திருமணங்களை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கும் படி வருவாய்த்துறை அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

பொள்ளாச்சியில் கார் விபத்து: 3 பேர் பலி

பொள்ளாச்சியில் கார் விபத்து: 3 பேர் பலி

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் செல்வம் .இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆணை மலை அருகே உள்ள மாசானியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஆம்னிவேனில் சென்றார். உடுமலை  ஆணைமலை ரோட்டில் உள்ள சின்னபாப்பனூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த திண்டுக்கல்  ஆணைமலைக்கு விடப்பட்டிருந்த ஸ்பெஷல் பஸ் மீது மோதியது.

விபத்தில் வேன் டிரைவர் தேவேந்திரன்(22) செல்வம்(32) அவரது மகன் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இவ்விபத்து குறித்து பொள்ளாச்சி கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.

கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டி கடலூர் மாவட்ட பெற்றோர், மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும், கட்டண விவரம் குறித்து விசாரிக்கச் செல்லும் அதிகாரிகள் மற்றும் பெற்றோரை தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவமரியாதை செய்து வரும் நிலையிலும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் பால்கி தலைமை வகித்தார்.

ஜுலை 30ல் குரூப் 2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி ஜுலை 30 ந் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிப்போகும் என்ற வதந்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் 104 மையங்களில் ஜுலை மாதம் 30 ந்தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. அதன்படி, ஜுலை 30 ந்தேதி அன்று திட்டமிட்டபடி, குரூப் 2 தேர்வு நடைபெறும். இதுதொடர்பாக ஒருசில ஊடகங்களில் வரும் தவறான செய்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அனில்மேஷ்ராம் கூறி உள்ளார்.

தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

அரசு கேபிள் டிவியைத் துவக்கும் முன், தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்கிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு கட்டுப்பாட்டில் எம்.எஸ்.ஓ.க்கள் இயங்கினால் அரசு கேபிள் டிவிக்குப் போட்டியாக தனியார் கேபிள் நிறுவனங்கள் செயல்படும். அப்போது கட்டண சேனல்களை தன் வசம் வைத்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள், அந்தச் சேனல்களை அரசுக்கு கேபிள் டிவிக்குத் தர தயாராக இருக்க மாட்டார்கள்.

இதனால் அரசு கேபிள் நிறுவனத்திற்கு நஷ்டமாவதோடு தேவையற்ற தொழில் போட்டிகள் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடைமையாக்கி, அதன் பின்னர் அரசு கேபிள் நிறுவனத்தையும் இயக்கிட வேண்டுகிறோம். இதன் மூலம் பொதுமக்களும் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவியைப் பார்க்க இயலும் என்று அவர் கூறியுள்ளார்.

கூடலூரில் மூலிகை பண்ணை

கூடலூரில் மூலிகை பண்ணை

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா மையமாக இல்லாத கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியை உள்ளடக்கிய தேவாலா அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை துறையின் சார்பில் மூலிகை பண்ணை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.

வெப்பம், மிதவெப்பம், குளிர் என தமிழ் நாட்டிலேயே மூன்று பருவ காலத்திலும் மக்கள் வந்து செல்லும் சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்தில் ஏலக்காய், இலவங்கம், பட்டை, குருமிளகு, ஜாதிக்காய் போன்ற வாசனை திரவியங்கள் அதிகம் விளைகிறது.

அத்தோடு மித வெப்ப பகுதியான தேவாலாவில் சீரகம், கடுகு, வெந்தயம், மல்லி, இஞ்சி, கடுகு, பூண்டு, திப்பிலி, ஜாதி பந்திரி, வெண்ணிலா, அதோவன், அன்னாசி பூ, வசம்பு போன்ற மூலிகை வகைகள் விளைகிறது.

இப்பண்ணை அமைப்பதின் மூலம், நீலகிரி மாவட்டத்தில் விளையும் வாசனை திரவியங்களையும், மூலிகைகளையும் ஒருசேர ஒரே இடத்தில் பயிர் செய்து மூலிகை பண்ணை அமைப்பதின் மூலம் நீலகிரி மாவட்டம் தேயிலை மட்டும் விளையும் மாவட்டம் என்ற பெயரை உடைக்கவும், பொது மக்களுக்கு தேவையான எல்லா வகை மூலிகைகளையும் உற்பத்தி செய்து கொடுப்பதன் மூலம், விவசாய மக்களுக்கு நல்ல முறையில் பொருளாதார வருவாயையும் ஏற்படுத்த முடியும்.

அத்தோடு சுற்றுலா பயணிகளால் ஒதுக்கப்பட்ட்ட பகுதியாக உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கமுடியும் என்று தோட்டக்கலை துறையின் இயக்குனர் முனைவர் ராம்.சுந்தர் தெரிவித்தார்.

Wednesday, June 29, 2011

போலி பெண் போலீசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மதுரை போலீசார்

மதுரை செல்லூரைச் சேர்ந்த ராணி என்பவர், தனது தோழி பெண் போலீசாரின் உடையை அணிந்துகொண்டு, மதுரை களிமேடு பகுதியில் உலாவந்துள்ளார்.

அப்போது களிமேடு போலீசார் சந்தேகப்பட்டு ராணியை விசாரித்துள்ளனர். போலீசார் விசாரித்ததில், ராணி போலி பெண் போலீஸ் என தெரிய வந்தது.

இதையடுத்து ராணியை மதுரை ஜெஎம்4 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். போலீஸ் உடையை அணிந்த குற்றத்திற்காக அவரை 15 நாள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணியை ஏற்கனவே சிவக்குமார் என்ற போலீஸ்காரர் காதல் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை: அதிமுக மந்திரி நீக்கம்

மதுரை: அதிமுக மந்திரி நீக்கம்

அதிமுக மதுரை மாவட்டச் செயலாளராக செல்லூர் ராஜூ, கடந்த 5 ஆண்டுகளாக மதுரை மாவட்டச் செயலாளராக பதவி வகித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் அதிமுக தலைமை அவரை நியமித்தது.

இந்நிலையில் மாவட்டச் செயலாளராக இருந்த செல்லூர் ராஜூவை நீக்கிட்டு, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவான ஏ.கே.போஸை மதுரை மாவட்ட செயலாளராக அதிமுக தலைமை நியமித்துள்ளது.

ராஜ்யசபா வேட்பாளர் ரவி பெர்னாட்: ஜெ. அறிவிப்பு

அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக, ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட்டை, கட்சி பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ராமலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்பாளராக ரபி பெர்னார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தல், ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது.

இலவச லேப்-டாப் : பட்டியல் தயாரிப்பு

இலவச லேப்-டாப் :  பட்டியல் தயாரிப்பு
 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.
 
இதை செயல்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு லேப்-டாப் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
 
இதற்காக லேப்-டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதிரி லேப்-டாப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் லேப்-டாப் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கிவிடும்.
 
இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு லேப்-டாப் தேவை என பட்டியல் தருமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பட்டியலிடப்பட்டு வருகிறது.
 
இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது.   பிளஸ்-1 வகுப்பில் மாணவ-மாணவிகள் இன்னும் சேர்ந்து வருவதால் முழுமையாக கணக்கெடுத்து முடியவில்லை. ஆனால் பிளஸ்-2 வகுப்புக்கு கணக்கெடுத்து முடிக்கப்பட்டு விட்டது. வகுப்பு வாரியாக பள்ளி கல்வித்துறை அதிகாரி களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கவிதாலயா முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் : இயக்குநர் ஸெல்வன்

கவிதாலயா முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்
: இயக்குநர் ஸெல்வன்

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் ஸெல்வன்,   சூரி படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.   இதையடுத்து  ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த படம் கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.

படத்தை வெளியிடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 
“கிருஷ்ணலீலை” படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது. 
 
2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.
 
“கிருஷ்ணலீலை” ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன்.
 
எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்று கூறியுள்ளார்.
 
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.

செல்போன் வியாபாரிகள் நாளை கடை அடைப்பு

 செல்போன் வியாபாரிகள் நாளை கடை அடைப்பு
 
ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் உள்பட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சொந்தமாக விற்பனை நிலையங்கள் வைத்துள்ளன. என்றாலும் இந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு தனியார்களையே நம்பி உள்ளன. 
 
ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு தனியார் செல்போன் கடைக்காரர்கள் கணிசமான தொகையை கமிசனாக பெற்று வருகிறார்கள். இந்த கமிசன் தொகையை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைத்துள்ளன. 
 
இதனால் செல்போன் கடைக்காரர்களுக்கு லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது செல்போன் கடைகாரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (வியாழன்) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த செல்போன் கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
 
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
’’செல்போன் உபயோகிப்பாளர்களின் பணத்தை சிறப்பு சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து கோடி, கோடியாக லாபம் அடைவதை ஏற்க முடியாது. புதிய இணைப்பு விற்பனையாளர்களின் லாபம் குறைக்கப்பட்டதை கண்டிக்கிறோம்.
 
இதை வலியுறுத்தி 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்போன் கடைகள் அடைக்கப்படும். ரீசார்ஜ், புதிய இணைப்பு விற்பனை எதுவும் நாளை பகலில் நடைபெறாது’’ என்று அறிவித்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள் சென்னையில் அதிகரிப்பு

நீரிழிவு நோயை கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் டெல்லியில் நடந்தது. இதை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

டெல்லியில் 31 லட்சம் குடிசைவாசிகள் உள்ளனர். இவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், அவர்களிடம் இந்த நோய்கள் உள்ளனவா என்று கண்டறிய மருத்துவ சோதனைகளும் நடத்தப்படும்.  
 
தொற்று நோய் வகையை சாராத, இருதய நோய், நீரிழிவு, கேன்சர், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்காக சோதனை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.
 
30 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணி பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வசதியாக நாடு முழுவதும் 20 ஆயிரம் துணை மையங்கள் ஏற்படுத்தப்படும். 

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட 33 நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களிடம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், போன்ற நோய்களை கண்டறியும் பரிசோதனைகளும், விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட உள்ளன.  

 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சென்னையிலும், பெங்களூரிலும்தான் அதிகமாக உள்ளன. தற்போதுள்ள அளவைவிட விரைவில் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு, 3 லட்சம் பேரிடம் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
 
அவர்களில் 50 ஆயிரம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. தவிர 60 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 40 ஆயிரம் பேருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது. கர்ப்பிணி பெண்களிடம் நடத்திய சோதனையில், 3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்று பேசினார்.

Tuesday, June 28, 2011

பி.எல்.படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

வாஸ்து கோளாறால் மிரட்டும் மேயர் பங்களா
 
திருச்சி மாநகராட்சி அருகே தாசில்தார் அலுவலகம் பின்புறம், மேயர் மற்றும் துணை மேயருக்கு என 2 பங்களாக்கள் கட்டப்பட்டது. மேயர் பங்களா ரூ.48 லட்சம் செலவில் கட்டப்பட்டது. துணை மேயர் பங்களா ரூ.55 லட்சத்தில் கட்டப்பட்டது. இதில் துணை மேயர் அன்பழகன் மட்டும், துணை மேயர் பங்களாவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
 
அருகில் உள்ள மேயர் பங்களா சுமார் 12 வருடமாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பங்களாவை சுற்றி புல்புதர்கள் வளர்ந்து உள்ளன.
 
இந்த பங்களாவிற்கு மேயர் பதவியில் உள்ளவர்கள் குடிவர தயங்குகின்றனர். இதற்கு வாஸ்து பிரச்சினையே காரணம் என பரபரப்பாக கூறப்படுகிறது. பங்களா கட்டப்பட்டபோது வாஸ்து முறை பின் பற்றப்படவில்லை.
 
பங்களா அருகில் உள்ள கிணறு வாஸ்துபடி அமையவில்லை. வாசல், சமையல் அறை, தண்ணீர் தொட்டி ஆகியவையும், வாஸ்து முறைப்படி இல்லை என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
இதனால் மேயர் பங்களா அரசியல் வாதிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
அதற்கு சில அரசியல் பிரமுகர்களின் திடீர் சரிவையும் காரணமாக கூறுகின்றனர்.
 
இதனால் மேயர் பங்களாவில் குடியேற தயக்கம் காட்டுகிறார்கள். இருப்பினும் துணை மேயர் அன்பழகன், தைரியமாக உள்ளார். ஆனாலும் அவருக்கும் பங்களா கட்டப்பட்ட பிறகு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி கிடைக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

சாருபாலா தொண்டமான் மேயர் பதவி ராஜினாமா செய்ததும் மேயர் பொறுப்பு பதவி வகித்தவர் மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் மெஜாரிட்டி தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும் மேயர் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு மேயர் பங்களா ராசியையே கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்து கேட்டால் மேயர் தரப்பிலும், துணை மேயர் தரப்பிலும் வாஸ்து ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார்கள். மேயர் சுஜாதா அப்போதுதான் புதுவீடு கட்டி குடியேறியதால் மேயர் பங்களாவிற்கு குடியேறவில்லை.
 
எனவே வாஸ்து பீதி காரணமெல்லாம் கிடையாது என்கிறார்கள். துணை மேயர் அன்பழகன், ஆதரவளார்களோ, திராவிடர் பாரம்பரியத்தில் வந்த எங்களுக்கு வாஸ்து எல்லாம் தூசு. அண்ணன் மேயரானதும், மேயர் பங்களாவில் குடியேறுவார் அப்போது வாஸ்து எங்கே போகப்போறது பாருங்க என்கிறார்கள். இதனால்... உள்ளாட்சி தேர்தலில் மேயர் பங்களா வாஸ்து ராசி... வெற்றி -தோல்வியில் முக்கிய இடம்பிடிக்கும் என்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை

6 குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு தள்ளிவைப்பு

தர்மபுரி அருகே ஊரை விட்டு 6 குடும்பங்களை தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த குடும்பங்களை சேர்ந்த 25 பேர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த 6 குடும்பத்தினர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

’’நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ள அருந்தியர் காலனியில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அதில் 6 குடும்பங்களை சேர்ந்தவர்களை மட்டும் ஊரை விட்டு தள்ளி வைத்து உள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காலனியில் உள்ள மாரியம்மன்கோவிலில் திடீரென 31/2 பவுன் தங்க நகை மாயமானது. அந்த நகையை எடுத்தது யார்? என தட்டி கேட்டதன் விளைவாக எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் கடந்த 3 ஆண்டுகளாக ஊரில் உள்ள தண்ணீர் குழாயில் குடிநீர் எடுக்கவும், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பிற குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் எங்கள் குழந்தைகளுடன் பேசினால் அவர்களுக்கு கட்டப்பஞ்சாயத்து நடத்தி அபராதம் விதிக்கப்படுகிறது.

இத்தகைய செயல்பாடுகளால் 6 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஊர்திருவிழா தொடங்கி உள்ளது.

இந்த பண்டிகையில் எங்கள் 6 குடும்பங்களை சேர்ந்தவர்களை மட்டும் சேர்த்து கொள்ளாமல் தள்ளி வைத்துள்ளனர். எனவே எங்களை தள்ளி வைக்க காரணமான காலனியின் முக்கிய பிரமுகர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.

நாங்களும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளவும், ஊர் மக்களோடு சேர்ந்து வாழவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இவர்கள் குடும்பமாக வந்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்த காட்சி உருக்கமாக இருந்தது.

இந்த மனு தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நூதன போராட்டம்

பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் பீடி சுற்றினால் 114 ரூபாய் கூலி வழங்க வேண்டும், நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (28-ந்தேதி) வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நெல்லை மாவட்ட தமிழ்நாடு பீடித்தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.
 
அதற்கு மற்ற கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமான பீடித்தொழிலாளர்கள் உள்ளனர்.
 
அவர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் பீடித்தொழிலாளர்கள் அனைவரும் பீடி இலைகள் வாங்க, கட்டிய பீடிகளை கொடுக்க கம்பெனிகளுக்கு செல்லவில்லை.
 
நெல்லை மாவட்ட ஜனநாயக பீடித்தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராமையா, வெங்கட்ராமன், செல்வி, ஜெயக்கொடி, மாரியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காற்றாடி பறக்க விடுவதற்கு முற்றிலும் தடை

வாஸ்து கோளாறால் மிரட்டும் மேயர் பங்களா
 
திருச்சி மாநகராட்சி அருகே தாசில்தார் அலுவலகம் பின்புறம், மேயர் மற்றும் துணை மேயருக்கு என 2 பங்களாக்கள் கட்டப்பட்டது. மேயர் பங்களா ரூ.48 லட்சம் செலவில் கட்டப்பட்டது. துணை மேயர் பங்களா ரூ.55 லட்சத்தில் கட்டப்பட்டது. இதில் துணை மேயர் அன்பழகன் மட்டும், துணை மேயர் பங்களாவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
 
அருகில் உள்ள மேயர் பங்களா சுமார் 12 வருடமாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பங்களாவை சுற்றி புல்புதர்கள் வளர்ந்து உள்ளன.
 
இந்த பங்களாவிற்கு மேயர் பதவியில் உள்ளவர்கள் குடிவர தயங்குகின்றனர். இதற்கு வாஸ்து பிரச்சினையே காரணம் என பரபரப்பாக கூறப்படுகிறது. பங்களா கட்டப்பட்டபோது வாஸ்து முறை பின் பற்றப்படவில்லை.
 
பங்களா அருகில் உள்ள கிணறு வாஸ்துபடி அமையவில்லை. வாசல், சமையல் அறை, தண்ணீர் தொட்டி ஆகியவையும், வாஸ்து முறைப்படி இல்லை என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
இதனால் மேயர் பங்களா அரசியல் வாதிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
அதற்கு சில அரசியல் பிரமுகர்களின் திடீர் சரிவையும் காரணமாக கூறுகின்றனர்.
 
இதனால் மேயர் பங்களாவில் குடியேற தயக்கம் காட்டுகிறார்கள். இருப்பினும் துணை மேயர் அன்பழகன், தைரியமாக உள்ளார். ஆனாலும் அவருக்கும் பங்களா கட்டப்பட்ட பிறகு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி கிடைக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

சாருபாலா தொண்டமான் மேயர் பதவி ராஜினாமா செய்ததும் மேயர் பொறுப்பு பதவி வகித்தவர் மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் மெஜாரிட்டி தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும் மேயர் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு மேயர் பங்களா ராசியையே கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்து கேட்டால் மேயர் தரப்பிலும், துணை மேயர் தரப்பிலும் வாஸ்து ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார்கள். மேயர் சுஜாதா அப்போதுதான் புதுவீடு கட்டி குடியேறியதால் மேயர் பங்களாவிற்கு குடியேறவில்லை.
 
எனவே வாஸ்து பீதி காரணமெல்லாம் கிடையாது என்கிறார்கள். துணை மேயர் அன்பழகன், ஆதரவளார்களோ, திராவிடர் பாரம்பரியத்தில் வந்த எங்களுக்கு வாஸ்து எல்லாம் தூசு. அண்ணன் மேயரானதும், மேயர் பங்களாவில் குடியேறுவார் அப்போது வாஸ்து எங்கே போகப்போறது பாருங்க என்கிறார்கள். இதனால்... உள்ளாட்சி தேர்தலில் மேயர் பங்களா வாஸ்து ராசி... வெற்றி -தோல்வியில் முக்கிய இடம்பிடிக்கும் என்கிறார்கள்.

ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடமையாக்க கோரிக்கை

அகில இந்திய வேளாளர் - பிள்ளைமார், செங்குந்தர் - முதலியார் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜன், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

’’சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள இல்லத்தில் ராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகளாக வாழ்ந்தார். அதன்பின்னர், வடலூர் சென்று சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆன்மீகத் தொண்டாற்றினார்.]

ஆனால், சென்னையில் 33 ஆண்டுகள் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு கவனிப்பாரற்று பாழடைந்த நிலையில் உள்ளது. அதன் உரிமையாளர்கள் வெளியூரில் இருந்து கொண்டு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர்.

2001-2006-ல் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வீட்டை அரசுடமையாக்கி அருங்காட்சியகம் அமைத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.

இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

மயிலாடுதுறை அருகே வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் கடந்த 5 2 2007 அன்று மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலையத்தில் சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் ஏற முயன்றார்.

அப்போது பஸ் புறப்பட்டதால் செல்வம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் செல்வத்திற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மயிலாடுதுறை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடந்து, அதில் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு இழப்பீட்டுத்தொகை கேட்டார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டியன், கடந்த 20 08 2009 அன்று செல்வத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக வட்டியுடன் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 777 வழங்க சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட செல்வத்திற்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து நீதிபதி செந்தூர்பாண்டியன், சென்னை அரசுவிரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு அலுவலரின் உதவியுடன் 27.06.2011 அன்று மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் மேற்கண்ட பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஓப்படைக்கப்பட்டது.

ஈரோடு: 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி

ஈரோடு: 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி

காடுகளில் உள்ள யானைகள் பாதை மாறுவதை தடுக்க 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு வனக்கோட்ட அலுவலர் அருண் தெரிவித்துள்ளார்.

ஈரோடு வணக்கோட்டத்தில் சுமார் 1200 யானைகள் இருக்கிறது. மழையில்லாத காலத்தில் தண்ணீருக்ககவும், உணவுக்காகவும் யானைகள் காட்டை விட்டு விவசாய நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் வருவதை தடுக்க சத்தியமங்கலம் வணக்கொட்டத்தில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கும், ஈரோடு வணக்கோட்டத்தில் இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கும் வனப்பகுதிகளை தாண்டி யானைகள் ஊருக்குள், வரமுடியாத அளவில் குழிகள் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மீனவக் கிராமங்களுக்குத் தூண்டில் வளைவுகள்: வைகோ கோரிக்கை

இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

மயிலாடுதுறை அருகே வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் கடந்த 5 2 2007 அன்று மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலையத்தில் சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் ஏற முயன்றார்.

அப்போது பஸ் புறப்பட்டதால் செல்வம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் செல்வத்திற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மயிலாடுதுறை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடந்து, அதில் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு இழப்பீட்டுத்தொகை கேட்டார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டியன், கடந்த 20 08 2009 அன்று செல்வத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக வட்டியுடன் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 777 வழங்க சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட செல்வத்திற்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து நீதிபதி செந்தூர்பாண்டியன், சென்னை அரசுவிரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு அலுவலரின் உதவியுடன் 27.06.2011 அன்று மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் மேற்கண்ட பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஓப்படைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்தில் தீ

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

சேலம்: நில மோசடி புகாரில் திமுக பிரமுகர் கைது

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவின் கருத்துக்கு தங்கபாலு வரவேற்பு

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன் சத்தியராஜ், மனோரமா சந்திப்பு

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன் சிவக்குமார், சூர்யா சந்திப்பு

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

மா.செயலாளராக அமைச்சர் சிவபதி நியமனம்

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

சென்னையில் நடமாடும் தானியங்கி சிக்னல்

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் செ.மா. வேலுச்சாமி அமைச்சராக இருந்தார். அதற்குப்பின் திமுக தலைமையிலான ஆட்சி வந்தது. கடந்த 2009ல், ‌வேலுச்சாமியின் கோவை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக, ரூ. 52.54 லட்சம் அதிகமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றவியல் நீ‌திமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பானுமதி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரமோ, சாட்சியோ இல்லை என்றும், இதனால் இவர்கள‌ை விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

ரசிகர்களிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

புரியாத டைட்டில்: நடிகர் கரண் வருத்தம்

சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் செ.மா. வேலுச்சாமி அமைச்சராக இருந்தார். அதற்குப்பின் திமுக தலைமையிலான ஆட்சி வந்தது. கடந்த 2009ல், ‌வேலுச்சாமியின் கோவை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக, ரூ. 52.54 லட்சம் அதிகமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றவியல் நீ‌திமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பானுமதி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரமோ, சாட்சியோ இல்லை என்றும், இதனால் இவர்கள‌ை விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

காங்கிரசில் இணைந்த பாமக மாவட்ட தலைவர்

பெண்கள் வருகை குறைவால் திரைத்துறை வீழ்ச்சி : டி.ஆர்.

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.

சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி